தனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முக நூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவரை நபரொருவரிடமிருந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாதாள உலக தலைவன் மாமாஸ்மியின் சகா என கருதப்படும் மொஹம்மட் ரஹீம் அப்துல் ரவூப் உள்ளிட்ட ஐவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டாய சிறைப்படுத்தியமை, பலியல் ரீதியாக சித்திரவதை செய்தமை, தாக்கியமை, பணம் கொள்ளையிட்டமை, முகநூலில் பாலியல் உறவு காணொளியை பதிவிடுவதாக மிரட்டியமை ஆகிய குற்றச்சட்டுக்களின் கீழ் இந்த ஐவரையும் கைதுசெய்த பொலிஸார் இன்று அவர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்தது.
நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்







