அவுஸ்திரேலியாவுக்கு இரண்டாவது போட்டி நாளை.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான இரண்டாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இந்த  இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட குறித்த தொடரில் அவுஸ்திரேலிய அணி 1க்கு 0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில் அடுத்த இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.