வங்காள தேசத்தின் கிரிக்கெட் அணியுடைய ஆல்ரவுண்டர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி., 20 ஓவர் கொண்ட போட்டியின் கேப்டனுமான ஷகிப் அல் ஹசன்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு உள்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக வங்காள தேச கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணமானது திட்டமிட்டபடி நடைபெறுமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சமயத்தில்., இவர்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டு தவிர்த்து மீதமுள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தருணத்தில்., போராட்டம் நடைபெற்று வந்த தினத்தன்றே., ஷகிப் அல் ஹசன் டெலிகாம் நிறுவனத்தின் கிராமின்போன் நிறுவனத்திற்கு தூராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும்., வங்காளதேசத்தின் கிரிக்கெட் அணியின் நிபந்தனையின் படி., கிரிக்கெட் வீரர்கள் டெலிகாம் நிறுவனத்தின் தூதராக கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது.
ஷகிப் அல் ஹாசன் தற்போது இந்த நிபந்தனையை மீறியுள்ளதால்., இவரிடம் விளக்கம் கேட்டு வங்காளதேச கிரிக்கெட் வாரியமானது சம்மன் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும்., இவர் சம்மனிற்கு தகுந்த பதில் அளிக்காத பட்சத்தில்., கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.