மரவள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி.!

தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு  – 250 கிராம்
வெல்லம்  – 150 கிராம்
பால் – அரை லிட்டர்
முந்திரி  – 15
உலர் திராட்சை  – 10
ஏலக்காய் –  3
தேங்காய்த்துருவல் – 1 கப்
நெய்  – 4 ஸ்பூன்.

செய்முறை :

மரவள்ளிக்கிழங்கு பாயசம் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, அதில் மரவள்ளிக்கிழங்கை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு குக்கரில் வறுத்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி உருகியதும், அதில் முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும். ஏலக்காயை தூளாக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூள் செய்து போட்டு, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி, வேகவைத்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்பு வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சையை நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் சேர்க்கவும். அதனுடன் ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும்.

பிறகு அதனுடன் தேங்காய்த்துருவலை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கினால், சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம் தயார்.