55 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கப்போகும் திட்டம்.!

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராமேஸ்வரத்தி இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி நகரத்திற்கும் கடந்த1964 ஆம் ஆண்டு நவம்பர் வரை ரயில் சேவை இயங்கி வந்தது.

இந்தநிலையில், கடந்த 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக ரயில் பாதை அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான  ரயில் சேவை முற்றிலும் அழிந்து போனது.

இந்நிலையில், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை மீண்டும் ரயில் பாதை அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, தற்போது அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது.

ரயில்பாதையை மீண்டும்  அமைப்பதற்கு  ஏற்கனவே இரண்டு கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளது, இப்பொது அப்பகுதியில் மண் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 10 பேர் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை மீண்டும் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் 55 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.