இந்தியன் 2 படத்தின் ஒரே ஒரு காட்சிக்காக படக்குழு எத்தனை கோடி செலவு செய்கிறார்கள் தெரியுமா? அப்படி என்ன காட்சி தெரியுமா ??

இந்தியன் இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம் குறித்து இப்போதும் பலர் பேசுவார்கள்.

ஷங்கர்-கமல்ஹாசன் இணைந்து உருவாக்கிய இந்தியன் படத்தின் 2ம் பாகம் தயாராகி வருகிறது. இதுவரை படப்பிடிப்பு சென்னை, ராஜ முந்திரி என நடந்து வருகிறது, ஆனால் அதிகம் செட் போட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கின்றன.

தற்போது போபாலில் படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட இருக்கிறதாம். அதில் 2000 நடிகர்கள் கலந்து கொள்ள எடுக்கப்படும் சண்டை காட்சிக்கு மட்டும் படக்குழு ரூ. 40 கோடி செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட சண்டை காட்சியை பீட்டர் ஹெயின் கவனிக்க இருக்கிறார். போபாலத்தில் சண்டை காட்சியை தொடர்ந்து படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தைவான் மற்றும் யூரோப் நாடுகளுக்கு செல்ல முடிவு எடுத்துள்ளனர்.