பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் தற்போது முழுமையாக இந்தியன் 2 படத்தில் இணைந்துவிட்டார். சங்கர் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அவர் தன் அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார். அவர் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. அண்மையில் இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் பலரால் பகிரப்பட்டது.
கமல்ஹாசன் சினிமாவில் மிக உயர்வாக கருதும் நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். அவர்களின் குடும்பத்தில் இருந்து கமல்ஹாசனுக்கு சினிமா 60 ஆண்டிற்காக வாழ்த்தும் கேடயும் கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. pic.twitter.com/cKo8B6HXah
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2019







