தமிழ் வைத்தியர் தொடர்பில் அவுத்திரேிலயாவில் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த தமிழ் வைத்தியர் இளமுருகன் ஆறுமுகம் குற்றமற்றவர் என தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து Rockhampton பகுதியில் மூன்று பெண் நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்தியர் இளமுருகன் ஆறுமுகத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், இக்குற்றச்சாட்டினை முற்றாக மறுத்த குறிப்பிட்ட வைத்தியர், அந்த பெண்களிடம் தவறான முறையில் நடந்துகொள்ளவில்லை என்றும் வைத்தயி பரிசோதனைகளை மாத்திரமே தான் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

தோல் புற்றுநோய் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஆறுமுகம் மீது கடந்த 2012ம் ஆண்டு 5 பிரிவுகளின் கீழ் இப்பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த பின்னணியில் குறித்த மருத்துவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பில் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மருத்துவர் ஆறுமுகம் “7 ஆண்டுகளாக தான் கடும் மன உளைச்சலை அனுபவித்திருந்ததாகவும், தற்போது தனக்கு நீதி கிடைத்துவிட்டது” என்றும் கூறினார்.

அதேநேரம் மருத்துவருக்குச் சார்பான இத்தீர்ப்பு தமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்த பெண்கள் மருத்துவ பரிசோதனையை தவறாக புரிந்துகொண்டமையே இதற்கான காரணம் என வைத்தியரின் சட்டத்தரணி தெரிவித்தார்.