பிக்பாஸ் பட்டத்தை வென்றதை விட, இதுதான் எனக்கு பெருமை.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க 105 நாட்களுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடைசியாக முகேன், சாண்டி,  லொஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்.

இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் கைப்பற்றினர். இரண்டாம் இடத்தை சாண்டி பிடித்தார். மூன்று இடத்தை லாஷ்லியா கைப்பற்றினர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்ற முகேன் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் பட்டத்தை வென்றதை விட தமிழ்நாட்டு மக்களின் மனதை வென்றதை பெருமையாக கருதுகிறேன் என பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.