பிக்பாஸ் மேடையில் தர்ஷனை பெருமைப்படுத்திய முகென் ராவ்.

பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராகி மகுடம் சூடியுள்ளார் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ்.

கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் அதிரடி திருப்பங்களுடன் சென்றது சீசன் 3 நிகழ்ச்சி.

நாளுக்கு நாள் என்ன நடக்கும் என்பதை யாராலுமே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பரபரப்பாகவே இருந்தது என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என பலரும் கணித்த நிலையில், எதிர்பாராதவிதமாக வெளியேற்றப்பட்டார்.

இது பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இவருக்கு அடுத்தபடியாக முகேன் அல்லது சாண்டி வெற்றி பெற வேண்டும் என பலரும் கருதினர், நான் வெற்றி பெறுவதை விட என் நண்பன் முகேன் வென்றால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி என தர்ஷனே ஒருமுறை கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த Finale நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன், நண்பன் தர்ஷனை அழைத்து பரிசுக் கோப்பையுடன் நண்பனை கட்டித் தழுவினார்.