ஈராக் வன்முறை போராட்டம்..! கொதித்தெழும் ஐ.நா..!!

ஈராக் நாட்டில் தற்போது வேலையின்மை மற்றும் பொருளாதார பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்., தற்போது ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது. இதன் காரணமாக ஈராக் நாட்டின் மக்கள் அனைவரும்., அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து., போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்த போராட்டத்தின் எதிரொலியாக நேற்று முன்தினதன்று ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் அரசிற்கு எதிரான பேரணியானது நடைபெற்றது. இந்த பேரணி தீடீரென வன்முறையாக வெடித்தது. மேலும்., பாக்தாத் நகரில் இருக்கும் வரலாற்று சின்னமாக கருதப்படும் தரீர் சதுக்கத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

இவர்களின் பயணத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து., காவல் துறையினருக்கும் – போராட்ட காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து., காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும்., போராட்டக்காரர்களை கலைக்கும் பொருட்டு தடியடியும் நடத்தப்பட்டதால்., மோதல் முற்றிய நிலையில்., போராட்டக்காரர்களை பின் வாங்கும் எண்ணம் இல்லாமல்., தடையை மீறி முன்னேறி சென்றனர்.

போராட்டக்கார்களின் மோதலை குறைக்க காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடந்ததை அடுத்து சுமார் 60 பேர் பரிதாபமாக பலியாகினர். சுமார் 1600 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாது பாதுகாப்பு பணியில் இருந்த 423 பாதுகாப்பு படையினர்., பிற அரசு அதிகாரிகள் என 1518 பேர் படுகாயமடைந்தனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்த நிலையில்., ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தற்போது ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில்., பலி எண்ணிக்கையும் 100 ஐ நெருங்கியுள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் சபையானது கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்., இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.