கால்சியம் நிறைந்த ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி?

கால்சிய சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவை.

அதுமட்டுமின்றி குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவும், இதயத் துடிப்பு மிகவும் துல்லியமாகச் சீராக இருக்கவும், இரத்தம் உறைவதைத் தூண்டி வெட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் வீணாக வெளியேறுவதைத் தடுக்கவும் இந்த கால்சியம் துணை புரிகிறது.

அந்தவகையில் கல்சியம் சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.

அதில் தக்காளியில் வைட்டமின் கே, கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன.

அந்தவகையில் தக்காளி, கொத்தமல்லி கொண்டு ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • தக்காளி – 1
  • வெங்காயம் சிறியது – 1
  • மிளகு தூள் – ஒரு சிட்டிகை
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை

தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக கலக்கவும்.

கடைசியாக உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.