கருவாட்டு குழம்போடு சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்..!!

கருவாடு வகை உணவுகளை விரும்பாத நபர்களே இல்லை. கருவாட்டு குழம்பில் இருந்து வரும் மனத்தை வைத்தே., கருவாட்டு குழம்பில் இருக்கும் உப்பு மற்றும் காரத்தின் தன்மையை எடுத்துரைத்து குழம்பின் சுவையை கூறிவிடுவார்கள்.

மேலும்., சிலர் காலையிலேயே கருவாட்டு குழம்பை தயார் செய்து கருவாட்டு சரியாக உப்பு., காரம் போன்ற பிற சுவைகள் சரியான பதத்தில் ஏறும் வரை காத்திருந்து பின்னர் அதனை உட்கொள்ளுவார்கள்.

பல கருவாட்டு குழம்பு பிரியர்களுக்கு இந்த பதிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும்., அதனை ஏற்று கொண்டு கருவாட்டு குழம்பு வகைகள் மற்றும் கருவாடு உணவு வகைகளை சாப்பிடும் சமயத்தில் இந்த வகை உணவுகளை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

இதனால் நமது உடல் நலமானது பாதிக்கப்பட்டு., உடலில் விஷத்தன்மை அதிகரித்து உடல் நல கோளாறுகள் ஏற்படும். கருவாடு., மீன் மற்றும் நண்டு வகை உணவுகளை சாப்பிடும் சமயத்தில் மோர்., தயிர் மற்றும் கீரை வகை உணவுகளை சாப்பிட கூடாது.

இவற்றை சேர்த்து சாப்பிடும் பட்சத்தில் உணவு விஷமாக மாறும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பிரச்னையை தவிர்ப்பதற்கு மிளகு., பூண்டு., திப்பிலி மற்றும் சீரகத்தை சேர்த்து இரசம் செய்து சாப்பிட்டு வரவேண்டும்.

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கவும்., அதிகளவு இறைச்சியை சாப்பிட்டாலும் உடனடியாக செமித்து நமது உடலை பாதுகாக்கிறது. மேலும்., உணவில் நச்சுத்தன்மை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

இதன் மூலமாக ஏற்படும் அஜீரணம்., வாந்தி மற்றும் பேதி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கப்படும். தலையில் எண்ணெய்யை தேய்த்து குடித்து விட்டு கருவாடு.,. மீன்., நண்டு., இறால் மற்றும் தயிர் மோர் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் மூக்கடைப்பு., இருமல்., சளி., காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.