இந்த நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே இத படிங்க

அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று தான் வாழைப்பழம்.

முக்கனிகளில் ஒன்று வாழையை இதனை பல நாடுகளில் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஆனால் சிலருக்கு வாழைபழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? என்ற சந்தேகம் உள்ளது.

அந்தவகையில் வாழைப்பழத்தினை சாப்பிடுவதா? அல்லது கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.

ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?

ஆயுர்வேதம் என்ன கூறுகிறது என்றால் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது ஆபத்தானது அல்ல. ஆனால் இதனால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடும்போது உங்களுக்கு சளி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதேபோல இது செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன் உங்களை சோம்பலாகவும் உணரச்செய்யும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதுதான்.

ஆனால் அது அனைவருக்கும் அல்ல. ஏனெனில் வாழைப்பழத்தில் லேடக்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது.

இது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

வேறு நன்மைகள்

உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களுக்கு அதிக பயனை அளிக்கும்.

இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. எனவே அடுத்தநாள் காலை சுறுசுறுப்பாகவே தொடங்குவீர்கள்.

ஒருவேளை நீங்கள் 500 கலோரிகளுக்கு குறைவாக உள்ள இரவு உணவை சாப்பிட விரும்பினால் இரண்டு வாழைப்பழங்களும் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலும் அதற்கு மிகசிறந்த தேர்வாக இருக்கும்.

ஒருவேளை இரவு நேரங்களில் உங்களுக்கு பசித்தால் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை விட ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் மற்ற நொறுக்குதீனிகளில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கும்.

முக்கிய குறிப்பு

இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும்போது சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவரும் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாம்.