பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வாட்ஸ் ஆப் செயலியின் ஊடாக ஹேக்கர்கள் கைவரிசை காட்டுவது தொடர்ந்துவருகின்றது.
தற்போதும் GIF எனப்படும் அனிமேஷன் கோப்புக்கள் வாட்ஸ் ஆப் ஊடாக பகிரப்பட்டுவருகின்றது.
இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் அனுப்பப்படும் GIF கோப்புக்களை திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக் கோப்புடன் மல்வேர்கள் சேர்த்து பரப்பப்படுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Double-Free எனப்படும் இந்த மல்வேர் ஆனது மொபைல் சாதனங்களின் நினைவகத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும், அப்பிளிக்கேஷன்களில் குளறுபடிகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்மார்ட் கைப்பேசிகளை கையாள்வதற்கு ஹேக்கர்கள் இதன் ஊடாக முயற்சிப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.