அதிமதுரத்தின் அளவில்லா பயன்கள்.!

அதிமதுரத்தின் வேரை சுவைத்து சாப்பிட்டு வந்தால் அதன் ஒரு விதமான இனிப்பு சுவையானது தொண்டைக்குள் இறங்குவதை நம்மால் நன்றாக உணர இயலும். இதழ் இருக்கும் இனிப்பானது நீண்ட நேரத்திற்கு நமது தொண்டையில் நிலைத்திருக்கும். இதன் மூலமாக எச்சில் அதிகளவில் சுரந்து., நாவறட்சியானது நீங்கும்.

நீரில் அதிமதுரத்தின் வேரை கொதிக்கவைத்து., பனங்கற்கண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து காலையில் தேநீருக்கு பதிலாக குடித்து வந்தால்., குயில் போல குரல் கிடைக்கும். இல்லங்களில் தயாரிக்கப்படும் நன்னாரியில் இதனை சேர்த்து குடித்து வந்தால் நன்றாக இருக்கும். மேலும்., அதிமதுரத்தின் வேர் குச்சிகள் மேலை நாடுகளில் இனிப்பு மிட்டாயாக வளம் வர துவங்கியுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை உபயோகிக்கலாம். தலைவலி மற்றும் தலைபாரம்., சைனஸ் பிரச்சனை இருக்கும் நபர்கள் சோம்பை கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால்., உடலை வளப்படுத்தி நமது உடல் நலத்தை பாதுகாக்கும். இதில் இருக்கும் சாரங்களின் மூலமாக வயிறில் இருக்கும் மென் படலத்தின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டு., வயிற்றுப்புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அதிகளவு புகை பிடிக்கும் நபர்கள் மற்றும் புகையை மறக்க நினைக்கும் நபர்கள் அதிமதுரத் துண்டை மென்று வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும்., வறட்டு இருமல் பிரச்சனைக்கு அதிமதுரம்., மிளகு மற்றும் கடுக்காய் தோலை சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனை சரியாகும்.

தொண்டை பகுதியில் இருக்கும் புண்கள் மற்றும் வாயில் இருக்கும் புண்களை குணப்படுத்துவதற்கு அதிமதுரத்தை வாயில் வைத்து மெல்ல வேண்டும். மேலும்., வயிற்றில் இருக்கும் புண்களை குணப்படுத்தவதற்காக அதிமதுர பொடியை நீரில் கலக்கி காலை எழுந்தவுடன் அரிசி வடித்த கஞ்சி நீருடன் குடித்து வர வயிற்று புண் பிரச்சனைகள் சரியாகும்.