ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும்: பார்த்திபன்

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கி உள்ள படம் ‛ஒத்த செருப்பு’. விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இப்படம், மக்களிடம் இன்னும் சரியாக போய் சேரவில்லை. இதனால் பார்த்திபன் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தியேட்டர் அதிபர்களிடம் படத்தை சீக்கிரம் எடுத்து விடாதீர்கள் என கோரிக்கையும் வைத்துள்ளார். கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஒத்த செருப்பு படம் பற்றி பேசி வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரில், ‛‛ஒத்த செருப்பு, இப்படிப்பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.