கடும் எதிர்ப்புக்கிடையில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்!

நடந்து முடிந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சுபஸ்ரீ மரணத்தில் அரசியவாதிகளின் மோசமான நடவடிக்கை பற்றி பொதுவாக விமர்சித்து பேசியிருந்தது இன்னும் சர்ச்சையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் பிகில் பட போஸ்டரில் விஜய் கசாப் கடையின் முட்டி (கட்டை) மீது செருப்பு அணிந்து கால் வைத்திருந்தது தங்கள் தொழிலை அவமதிப்பதாக கூறி கோவையை சேர்ந்த இறைச்சி கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு இறைச்சி வெட்ட பயன்படும் கட்டைகளை இறைச்சி கடைக்காரர்களுக்கு பரிசாக அளித்து அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.