சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை எப்படி போகிறது?

சிவகார்த்திகேயனின் படம் என்றால் குடும்பத்துடன் ரசிகர்கள் வந்து பார்க்கும் படியான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

அதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் நம்ம வீட்டுப்பிள்ளை படம் வெளியானது. படம் பாஸிடிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது.

இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கச்சி நடிக்க, சூரி நண்பராக காமெடியாக கலக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேண்டுமென்றே சிலர் கலவையான விமர்சனங்கள் கொடுத்து வந்தாலும் படம் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

ராம் முத்து ராம் சினிமாஸ் தங்கள் தியேட்டரிலும் ஹவுஸ் புல் என குறிப்பிட்டுள்ளார்கள்.