கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் உலக சாம்பியன்ஷிப் உலக சாம்பியன்ஷிப் நடை பந்தய போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு நிலவும் கடும் வெயிலால் இரவில் போட்டி நடந்து வருகிறது.
இந்தநிலையில், ஜப்பானைச் சேர்ந்த யூசுகே சுசுகி என்ற வீரர் 50 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் ஆண்கள் பிரிவில் , தங்கம் வென்றுள்ளார்.
மேலும், போர்த்துகீசிய நாட்டு வீரர் ஜோவா வியேரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 43 வயதாகும் ஜோவா வியேரா வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் சாதனைபுரிவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். இந்த பதக்கம் வென்றதால் மிக வயதான வீரர் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார்.
பெண்களுக்காக தனியாக நடைபெற்ற 50 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் சீனாவின் ருய் லியாங் என்பவர் தங்க பதக்கத்தையும் கத்தாரைச் சேர்ந்த மாவோகுலி மற்றும் இத்தாலியின் எலியோனாரா கிரிஜியோ முறையே என்பவர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றனர்.








