தினமும் எத்தனை நாவற்பழம் சாப்பிடலாம்?

பழங்களில் இனிப்பு., புளிப்பு மற்றும் துவர்ப்பு என மூன்று வகையான சுவைகளை தன்னுள்ளே அடக்கிக்கொண்டு., நண்பர்களிடம் நாக்கினை காட்டி கொண்டாட்டமடைய வைத்த பழம்தான் நாவற்பழம். இதில் உள்ள சத்துக்கள் ஏறலாம் எனலாம். உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்க நாவற்பழமும் உதவி செய்கிறது.

நாவற்பழத்தில் இருக்கும் எரிசக்தி., மாவுசத்து., நீரில் கரையும் நார்சத்து., கொழுப்புசத்து., புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள்., நியாசின்., சுண்ணாம்புச்சத்து., இரும்பு சத்து., மக்னீசிய சத்து., பாஸ்பிரஸ் மற்றும் பொட்டாசிய சத்துக்கள்., உப்பு மற்றும் நீர்ச்சத்தானது நிறைந்துள்ளது.

நாவல்பழம் மட்டுமல்லாது அதன் இலைகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும்., நாவல்பழ இலைகளில் நுண்கிருமியை நீக்கும் சக்தியும் உள்ளது. இதுமட்டுமல்லாது நாவல் பழத்தின் மரம் மற்றும் கொட்டைகள் என அனைத்தும் மருத்துவத்திற்கு பயன்பட்டு., நமது உடல் நலத்தை அதிகரிக்கிறது.

நாவற்பழத்தை நாம் நாளொன்றுக்கு குறைந்தது 10 ஆவது சாப்பிட்டு வர வேண்டும். இதனை சாப்பிட்டு வருவதால் சேர்க்கை நோய்யானது கட்டுக்குள் இருக்கும்., சிறுநீர் போக்கை கட்டுக்குள் வைக்கும்., பேதியை சரிசெய்யும்., இரத்த போக்கை கட்டுக்குள் வைக்கும்., இரத்த அழுத்தம்., வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் போன்றவற்றை குணப்படுத்தும்., வாத நோய் மற்றும் பால்வினை சம்பந்தப்பட்ட நோய்களை சரி செய்யும்.

இதுமட்டுமல்லாது வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்து., வாயு தொல்லைகளை அகற்றி., சிறுநீர் தேக்கம் மற்றும் சீத இரத்த பேதியை நிறுத்தவும் செய்கிறது. நாவல் பழத்தின் மரப்பட்டை மற்றும் விதைகளுக்கு பேதியை கட்டுக்குள் வைக்கும் ஆற்றலும் உண்டு., மலச்சிக்கல் மற்றும் கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்., வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை போன்றவற்றையும் குணமாக்கும்.

நாவற்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களின் காரணமாக நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து., கண்பார்வை திறன் அதிகரிக்கும். எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவினை சேர்த்து உடல் நலத்தினை பாதுகாக்கும். இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினின் அளவை அதிகரித்து., புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது.

இதனைத்தவிர்த்து பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை மற்றும் பெண்களின் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள்., இரும்புச்சத்துக்கள் உள்ளதால் உடல் நலத்தை அதிகரிக்கும். சிறுநீரக பாதையில் இருக்கும் கற்களை கரைதல்., உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. நாவற்பழ கொட்டையால் வெண்புள்ளி பிரச்சனை சரியாகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் அழற்சி சரிசெய்யப்படுகிறது.