ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல்

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதால் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு இடையே மீண்டும் போட்டி நடைபெறும்.

அதிபர்பதவிக்கான போட்டியில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி, தலைமை நிர்வாகியும், ஆப்கானிஸ்தான் தேசிய கூட்டணியை சேர்ந்தவருமான அப்துல்லா அப்துல்லா உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.