முடியின் அழகை பாதுகாக்க நாம் பல்வேறு வகையில் முயற்சி செய்திருப்போம். முடி பார்ப்பதற்கு அழகாவும், பொலிவாகவும் இருந்தால் மிக பெரிய விஷயம்தான். ஏனென்றால் உங்கள் முடிகள் கூட உங்களை பற்றி செல்கிறதாம். இந்த பதிவில் முடிகள் உங்கள் பற்றி கூறும் சுவாரசிய தகவல்களை பார்போம்
பெண் என்றாலும் ஆண் என்றாலும் முடியின் மீது மோகம் இருக்கத்தான் செய்யும். முடியிற்கு இயற்கையிலே மணம் உண்டு என ஒரு சில படங்களில் கூற, நாம் கேள்வி பட்டிருப்போம். உண்மையில் முடியின் ஆரோக்கியம்தான் அத்தகைய மணத்தை தருகிறது. ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தே அவரின் முடியின் நலனும் நிர்ணயிக்கப்படுகிறது.
உங்கள் தலையில் இருந்து வெள்ளை வெள்ளையாக உதிர்ந்தால் அதற்கு பூஞ்சைகள் தான் காரணியாக இருக்கும். ஆனால், இது பெரிதும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப்படி வெள்ளையாக உதிர்ந்தால் அது ஒரு வித தோல் சார்ந்த நோயாக கூட இருக்கலாம்.
உங்களின் முடியின் வளர்ச்சி குறைந்துள்ளது என்றால் அதற்கு இவைதான் காரணமாகும்.உங்கள் உடலில் புரதசத்து குறைத்திருந்தால் முடியின் வளர்ச்சியும் குறைவாகத்தான் இருக்கும். அத்துடன் நீங்கள் அதிக படியான ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்
சிலர் தலையில், மஞ்சளாக பொடுகு இருக்க கூடும். கிட்டத்தட்ட வழ வழப்பாக இருக்க கூடிய இந்த வகை பொடுகு சற்றே முடியின் நலனை உருகுலைக்க கூடியது. இவை முடியின் அடி வேர் முதல் பரவி உருவாக கூடும். இந்த வகை தலை பிரச்சினை ஹார்மோன் கோளாறுகளால் உருவாகும்.