பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் மக்களின் மனங்களை வெகு சீக்கிரம் வென்றவர் ஹரிஷ் கல்யாண். ஆரம்பத்திலேயே வந்திருந்தால் இவர் தான் வெற்றியாளராகியிருப்பார்.

பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வெகு சிலரில் இவரும் ஒருவர். நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜா படங்கள் ஹிட்டாகி கைகொடுத்தன.

இதனால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவிட்டார். தற்போது தாராள பிரபு படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அவர் உடல் எடை குறைந்து முன்பிருந்த தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதை இளமை திரும்புதே புரியாத புதிராச்சே என பேட்ட படத்தின் பாடல் வரிகளை போட்டு மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.