சண்டிகர் மாநிலத்தில் மருத்துவமனையில் தானாக நகர்ந்து சென்ற வீல் சேர்…!!!!

சண்டிகர் மாநிலத்தில் மருத்துவமனையில் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாற்காலி தானாக நகர்ந்து சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சண்டிகர் மாநிலத்தில் முதுநிலை மருத்துவப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் இரண்டு சேர்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலியானது திடீரென பின்னோக்கி நகர்ந்தது.

இதனைத்தொடர்ந்து, யாரோ பின்னால் இருந்து தள்ளிக்கொண்டு செல்வது போன்று தானாகவே நகர்ந்து சாலை வரை சென்றுள்ளது.

சக்கர நாற்காலியின் திடீர் திகில் பயணத்தை இரவுப் பணியில் இருந்த காவலாளி மனோஜ் குமாரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மிகவும் வழுவழுப்பான தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சக்கர நாற்காலி மெல்லிதாக வீசிய காற்றின் காரணமாக அதுபோன்று நகர்ந்திருப்பதாக காவலாளி பீதியுடன் கூறியுள்ளார்.

இருப்பினும், முதலில் பின்னோக்கி நகர்ந்து, அதன் பின்பு யாரோ தள்ளிச் செல்வது போல முன்னோக்கி நகர்ந்தது சற்று குழப்பதையே ஏற்படுத்தியுள்ளது.