முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா தன்னை கொடுமைப்படுத்தியதை கல்லூரி மாணவி ஒருவர் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா. இவர் தனது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை சரியில்லாமல் போகவே, சின்மயானந்தா லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவி தன்னை சின்மயானந்தா எப்படி கொடுமைப்படுத்தினார் என்று காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியதாவது, நான் எனது படிப்பு குறித்து அவரை பலமுறை பார்க்கச் சென்றுள்ளேன். அப்போது திடீரென்று ஒருநாள் என்னை அவரது அறைக்கு அழைத்து அவரது கைப்பேசியை கையில் கொடுத்தார். அதை வாங்கி பார்த்ததும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. குறித்த செல்போனில் நான் குளிக்கும் காட்சிகள் வீடியோவாக பதியப்பட்டிருந்தது.
இதைக்கண்டதும், நான் அழத்தொடங்கினேன். ஆனால் அவர் சிரிக்கத் தொடங்கியதோடு, அழாதே, எனது தேவைகளை நிறைவேற்றினால் போதும், இதை இணையத்தில் விடமாட்டேன். இல்லை என்றால் இந்த வீடியோ வைரலாகும். உனது குடும்பத்தையே சீரழித்துவிடுவேன் என்று மிரட்டினார்.
நான் செய்வதறியாது, என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, ஒட்டுத்துணியின்றி ஆயில் மசாஜ் செய்ய சொன்னார். மறுத்தேன். உதைத்தார். மிரட்டினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. தினமும் என்னை அழைத்து செல்ல அவர் பாதுகாவலர்கள் வந்துவிடுவார்கள், எனக்கு பயமாகவே இருக்கும். சின்மயானந்தா அறைக்கு சென்றவுடன் என்னை மகள் என அழைத்து தவறாக நடந்துகொள்வார்.
எனக்கு மாத விடாய் என்று சொன்னால் கூட விடமாட்டார். அவரை ஆதாரத்துடன் சிக்க வைக்க முடிவு செய்து கமெராவுடன் இருக்கும் மூக்கு கண்ணாடியை வாங்கினேன். பிறகு அவர் செய்யும் கொடுமைகளை வீடியோ எடுத்தேன். அப்படி தான் அவரை சிக்க வைத்தேன் என கூறியுள்ளார்.