மீல் மேக்கர் வடை செய்வது எப்படி ??

தேவைப்படும் பொருட்கள் :

மீல் மேக்கர் – 100 கிராம்
வெங்காயம் – 1
பொட்டுக்கடாலை – அரை கப்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
ப.மிளகாய் – 3
சோள மாவு – 1 ஸ்பூன்
கறிமசாலா – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்யும் முறை:

கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

மீல் மேக்கரை வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு சீரகத்துள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மீல் மேக்கரை சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.