வெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தண்டுள்ள சின்ன செடி ஆகும்.தினந்தோறும் நம் வீட்டு சமையலில் வெங்காயம் இல்லாத ஒரு சமையல் இருக்காது. வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது. அவ்வாறு சமைத்தாலும் அதில் சாப்பாட்டில் ருசி இருக்காது.

வெங்காயம் மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. அதில் குறிப்பாக நம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்வதும், வெங்காய சாறு பல்வேறு மருத்துவ நலன்களையும் தருகிறது.

வெங்காய சாற்றை பயன்படுத்தி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு கூட வராது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

பாக்டீரியா மற்றும் வைராஸ் ஏற்படும் காய்ச்சலை வெங்காயம் எளிதில் விரட்டி விடும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான். வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதனை பாதத்தின் அடியில் வைத்து, சாக்ஸ் அணிந்துகொண்டால் போதும் காய்ச்சல் பறந்துவிடும்.