கர்ப்பகாலத்தில் கால்வீக்கமா?.! ஏன் ஏற்படுகிறது?

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு விதமான உடல் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இது கர்ப்ப காலத்தில் சிறிது அதிகமாகவே உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்சனை குறித்தும்., அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் இனி காண்போம். கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரத்திற்கு நின்று கொண்டு இருந்தால்., இரத்த ஓட்டமானது சீராக இருக்காது. இதனால் கால்களில் வீக்கம் அதிகரித்து காணப்படும். இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு., நீண்ட நேரம் நிர்க்கமால் இருக்க வேண்டும். மேலும்., மதிய வேளைகளில் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பமான பெண்கள் நாளொன்றுக்கு சுமார் மூன்று வேலைகள் வீதம் 15 நிமிடத்தில் கால்களை தலையணைக்கு மேலே உயர்த்தி வைத்திருக்க வேண்டும். இந்த முறையானது எளிமையான மற்றும் சிறந்த வழியாகும். இதனால் கர்ப்ப கால வீக்கமானது எளிதில் குறைந்துவிடும். மேலும் கால்களுக்கு மெல்லிய வகையில் இருக்கும் காலணிகளை அணிவது சிறந்ததாகும். மேலும்., கடுமையான மற்றும் ஹீல்ஸ் ரக செருப்புகளை முற்றிலும் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. இந்த சமயத்தில்., போதுமான அளவுள்ள தண்ணீரை கட்டாயம் அருந்த வேண்டும்.

நாளொன்றுக்கு குறைந்தளவு இரண்டு லிட்டர் நீரையாவது அறிந்திருக்க வேண்டும். இவ்வாறாக தேவையான நீரை அருந்துவதால்., உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும்., கர்ப்பிணி பெண்களின் கால்கள் வீக்கமானது வடிவத்திற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஈரமான துணிகளை எடுத்து கொண்டு அல்லது ஐஸ் கட்டிகளின் உதவியுடன் ஒத்தனம் கொடுக்க வேண்டும். இந்த சமயத்தில்., உணவுகளின் உப்பின் அளவை கருத்தில் கொள்வதும் நல்லது. கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உப்பை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லதல்ல…

சரியான அளவில் உப்பு சேர்க்கை பராமரிக்கப்படும் போது., கர்ப்பிணி பெண்களின் இரத்த அழுத்தமும் சீராக இருக்கும். இதனால் கால்களின் வீக்கமும் குறையும். மேலும்., கர்ப்பிணி பெண்களின் உடலில் அதிகளவு ஊட்டச்சத்தானது அதிகரிக்கும். மேலும்., கர்ப்ப காலத்தில் எந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? எந்தளவில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிய வேண்டியது அவசியம்… ஊட்டச்சத்துக்கள் மூலமாக கால்வீக்கம் தொடர்பான பிரச்சனை எளிதில் சரியாகிவும். வாழைப்பழம்., அவகோடா மற்றும் அத்திப்பழம்., லீட்டாஸ்., செலரி மற்றும் கிவி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இதனைப்போன்று தக்காளி மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும்., கீரை வகை உணவுகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.