ரசிகர்கள் எதிர்பார்த்த இன்றைய டி20 நடைபெறுமா???

இந்தியாவில் சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20ஒவர் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20ஒவர் போட்டி இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்றது அப்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு:

இதையடுத்து,  2வது டி20ஒவர் போட்டி மொகாலியில் நடைபெற்றது இந்த போட்டியில் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20ஒவர் போட்டி பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம் இந்த போட்டியில் வெற்றி பெற்று டி20ஒவர் தொடரை தொடரை சமன் செய்ய தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும் என்பதால் போட்டி மிகுந்த விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

மேலும்., பெங்களூர் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி., பெங்களூரில் மாலை வேளையில் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளதால்., ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.