உயிர்ப்பலி வாங்கிய டிக்டோக்.! நடந்தது என்ன ??

தெலங்கானாவில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் நின்றவாறு இளைஞர் ஒருவர் டிக் டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், நீரில் அடித்து செல்லப்பட்டு பின்பு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் மோகத்தால் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பல கேம்களுக்கு அடிக்ட் ஆகி உயிரை விடுவது. அல்லது ஆபத்து நிறைந்த இடங்களில் செல்பி அல்லது டிஃடோக் செய்து ஆபத்தை சந்திப்பது என நடைபெறுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் மாவட்டம் பிணகல் மண்டலம் கோனு கோப்பு பகுதியில் கோப்புலா எனும் தடுப்பணை இருக்கின்றது.

இங்கே இரண்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இரண்டு நண்பர்கள், நீரில் ஆடியும் பாடியும் டிக்டாக் வீடியோவை எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தடுப்பணையில் இருந்த வந்த நீரின் வேகத்தின் காரணமாக கால் தவறி கீழே விழுந்த தினேஷ், நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவசர அவசரமாக காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு துறையினர் அடித்துச்செல்லப்பட்ட தினேஷை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னர் தினேஷ், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.