ஒருத்தரை போல் வாழ்ந்து காட்டுவது தான் பெரிய விஷயம் – பிக்போஸ் பிரபலம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து பெண் சிங்கம் என்று பெயர் வாங்கிய கையோடு பிக் பாஸ் சீசன் 1யில் பங்கேற்றவர் ஜூலி.

பிக் பாஸ் வீட்டில் ஜூலி என்றாலே யாருக்கும் பிடிக்காது. மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் மக்கள் உள்ளம் கவர்ந்த ஓவியாவை பொய் குற்றச்சாட்டுகள் சொல்லி பொது மக்கள் விமர்சனங்களுக்கும் உள்ளாகினார். பிக் பாஸ் விமர்சனங்கள் அடுத்து அவர் நிறைய படத்தில் நடித்தி வருகிறார். இந்நிலையில் ஜூலி கல்லூரி ஒன்றுக்கு விருந்தினராக சென்றிருக்கிறார்.

அவர் மேடையில் பேச ஆரம்பித்த போது மாணவர்கள் ஓவியா ஓவியா என்று கத்தி கூச்சலிட்டார்கள், அதற்கெல்லாம் அசராத ஜூலி ஒருத்தரை விமர்சிப்பது பெரிய விஷயம் இல்லை ஒருத்தரை போல் வாழ்ந்து காட்டுவது தான் பெரிய விஷயம் என்று துணிச்சலாக பேசி இருக்கிறார்.