ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டத்துடன் தீவிரவாதிகள்..!

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவுகள் அனைத்தையும் இரத்து செய்த மத்திய அரசு., ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரேதேசமாக பிரித்து அறிவித்தது.

இந்திய அரசுடைய நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பாகிஸ்தான்., ஜம்மு – காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து., வன்முறையை கட்டவிழ்த்து விட தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தருனத்தில்., அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்., 273 தீவிரவாதிகள் தொடர்ந்து நடமாடி வருவதாகும்., இவர்களில் சுமார் 166 பேர் உள்ளூர் வாசிகள் என்பதும்., 107 பேர் வெளிநாட்டினர் என்பதும் உளவுத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில்., சுமார் 112 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சார்ந்தவர்கள் என்றும்., 100 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 59 தீவிரவாதிகளும்., அல்-பதார் இயக்கத்தை சார்ந்த 3 தீவிரவாதிகளும் என்று உளவுத்துறையால் கூறப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தினர் அனைவரும் காஷ்மீர் பகுதியில் பெரியளவிலான தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில்., இந்திய – பாகிஸ்தான் எல்லையில் 30 ஏவுதளங்களை பாகிஸ்தான் அமைத்துள்ளது என்றும்., அங்கிருந்து தீவிரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.