மணமகனுக்கு தாலி கட்டிய மணப்பெண்.!

கர்நாடகா மாநிலத்தில், விஜயபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமக்கள் மாப்பிள்ளைக்கு தாலி கட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மக்கள் இதனை ஆச்சரியமாக பார்த்தாலும் கூட இது அசாதாரணமான ஒன்று இல்லை. எங்கள் குடும்பத்தில் இது போல பல திருமணங்கள் நடைபெற்று உள்ளது என அந்த குடும்பத்தினர் கூலாக பதில் கூறுகின்றனர். இந்த திருமணமானது பன்னிரண்டாம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணா சிலைக்கு அருகே நடைபெற்றது.

மணமகன் தாலி கட்டி முடிந்த பின்னர் மணமகளும் மாப்பிள்ளைக்கு தாலி கட்டுவது ஆண், பெண் இருவரும் சமம் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாகக் கூறி விட்டார்கள். இந்த முறையானது தற்போது சுவிட்சர்லாந்து வரை பரவி இருக்கின்றது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் மணமகனுக்கு தாலி கட்டிய பின்னர் அதனை முத்தமிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. இணையதள வாசிகள் இதுகுறித்து விமர்சித்தாலும், இது பண்பாடா, பிறழ்சியா? அல்லது புரட்சியா? என பல்வேறு விதமான குழப்பத்தில் இருக்கின்றனர்.