144 தடையை மீறி மணக்கோலத்தில் பாய்ந்த அரசியல் வாதி..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியின் மக்களைவை உறுப்பினர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பிரமுகரான அசாம்கான் மீது நிலமோசடி புகார் மற்றும் ஆடு – மாடுகளை திருடியது தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்த புகார்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு., தகுந்த தண்டனை பெற்று தரப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்., ராம்பூரில் இருக்கும் அசாம்கானின் இல்லத்தில் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில்., அளவுக்கு அதிகமான ஆதரவாளர்கள் குவிந்தத்தை அடுத்து., ராம்பூரில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக வெளியாட்கள் மற்றும் அக்கட்சியை சார்ந்த யாரும் உள்ளே வராதவாறு காவல் துறையினர் பார்த்து கொண்டனர்.

இந்த சமயத்தில்., உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் பகுதியின் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகி பெரோஜ் கான்., அசாம்கானை சந்திக்க முடிவு செய்து இருந்த நிலையில்., காவல் துறையினர் யாரையும் அனுமதிக்காத காரணத்தால்., தலையில் தொப்பி மற்றும் முகத்தினை மல்லிகை பூவால் மறைத்து மாப்பிள்ளை அலங்காரம் செய்து செல்ல முயற்சி செய்துள்ளார்.

இவர் வந்த வாகனத்தை சோதனை செய்த காவல் துறையினருக்கு அதிர்ச்சியாக இந்த விஷயம் தெரிந்துள்ளதை அடுத்து., பெரோஜ் கானை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.