கொட்டும் வசூலில் நயன்தாராவின் படம்..!!

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் லவ் ஆக்‌ஷன் ட்ராமா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஓணம் ஸ்பெஷலாக திரைக்கு வந்தது, இதில் நிவின்பாலி ஹீரோவாக நடித்துள்ளார், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் சுமார் ரூ 16 கோடிகள் வரை ஒரே வாரத்தில் வசூல் செய்துள்ளதாம், தமிழகத்திலும் இப்படத்திற்கு நல்ல வசூல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.