இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்கள்!

இலங்கை தேசிய அணிகளில் தற்போது வடக்கு வீரா்களின் ஆதிக்கம் அதிகாரித்து வருகின்றது உதைப்பந்து , கூடைப்பந்து ,வலைப்பந்து, தடகளம் போன்ற பல வகையான போட்டிகளில் வடக்கு வீரா்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக தெரிவாகி வருகின்றனர்.

அந்த வகையில் யா / நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவர்களும் எமது கழக வீர வீராங்கனையுமான கௌதமன் மற்றும் பிரியவர்ணா ஆகியோர் இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்து அனைவருக்கும் பெருமை சேர்ந்துள்ளனர்.

எமது கழகம் சார்பாக வடமாகாண ரீதியாக நடைபெறும் போட்டிகளில் பல வெற்றிகளை பெற முக்கிய வீரா்களாக திகழ்ந்து வருகின்றனர் சிறு வயது முதல் எமது கழகம் சார்பாக பல வகையான போட்டிகளில் பங்கு கொண்டு எமது கழகத்திற்கு வெற்றிகளை பெற்றுதந்து பெருமை சேர்ந்துள்ளர்கள்.

இவர்களை சிறு வயது முதல் பயிற்சிகளை வழங்கி சிறந்த வீரா்களாக உருவாக முக்கிய காரணமாக விளங்கிவரும் யா / நெல்லியடி மத்திய கல்லூரி விளையாட்டுத்துறை ஆசிரியர் அன்ரனி மற்றும் அதிபர் பாடசாலை சமூகம் எமது கழகம் அனைவரும் பெருமை கொள்ளுகின்றோம் இவர் மேலும் பல உயர்வுகளை பெற நாம் என்றும் துணை நிற்போம் இரு தேசிய வீரா்களுக்கும் எமது கழகம் சார்பாக நல் வாழ்த்துக்கள்.