40 வினாடிக்கு எத்தனை பேர் தற்கொலை செய்கிறார்கள் தெரியுமா?

உலகம் முழுவதும் நடைபெறும் தற்கொலைகள் குறித்த அதிர்ச்சி அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கடந்த 2010 ஆம் வருடம் முதல் 2016 ஆம் வருடம் வரை நடந்த தற்கொலைகள் குறித்த விபரங்கள் உள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் அறிக்கையின் படி சுமார் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும்., தற்கொலை செய்து கொள்பவர்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளுதல்., விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற தற்கொலைகள் கிராம புறங்களில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்., பெரும்பாலான தற்கொலைகளை பொறுத்த வரையில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் அதிகளவு நிகழ்வதாகவும்., இதன் படி இலங்கை., லேசோதா., லுமுவேனியா., தென் கொரியா., உகாண்டா., இந்தியா. ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இது போன்ற தற்கொலைகள் நடப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும்., சுமார் 1 இலட்சம் பேரில் 13.7 விழுக்காடு அளவிற்கு தற்கொலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., பெண்களை விட ஆண்களே அதிகளவு தற்கொலை செய்திருப்பதாகவும்., ஏனைய வங்காள தேசம்., சீனா., மொராக்கோ மற்றும் மியான்மர் நாடுகளில் பெண்கள் அதிகஅளவில் தற்கொலை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்., தற்கொலை செய்துகொள்பவர்களில் இளம் வயதுள்ள நபர்கள் அதிகளவிலும்., மொத்தமாக சுமார் 45 வயதிற்கு உட்பட்டோர் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., அதிகளவு தற்கொலை செய்யும் நபர்களில் 15 வயது முதல் 29 வயதிற்கு உள் இருக்கும் நபர்கள் செய்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக சாலை விபத்துகளில் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் மொத்தமாக சுமார் 8 இலட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சராசரி விழுக்காடானது அதிகளவு ஏற்படும் இயற்கை உயிரிழப்பு மற்றும் மார்பக புற்றுநோய் இறப்புகளை விட அதிகமாக உள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.