சுவையான மணத்தக்காளி மண்டி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளிக் கீரை,
அரிசி களைந்த கெட்டித் தண்ணீர் – 2 கப்,
சின்ன வெங்காயம் – 10,
உளுந்து – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் பால் – 1 கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி, ஆய்ந்து, கொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு லேசாக சிவந்ததும், பின்னர் சீரகம் போட்டுப் பொரிந்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் கீரையை அதனுடன் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கீரையை வதக்கியதும், அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை எடுத்து அதில் ஊற்றவும்.

அதன்பின்னர் கொதித்து வரும்பொழுது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். கீரையும் வெந்த பிறகு உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வரும் முன்னரே இறக்கி விடவும். சுவையான மணத்தக்காளி மண்டி தயார்.