பீட்சாவை இல்லத்திலேயே சுவையாக செய்வது எப்படி?.!!

முதலில் பீசா என்பது ஒரு ரொட்டி வகையே., இதை ரிச்சாக மாற்றுவது நாம் அதில் டிரெஸ்ஸிங் ஆக பயன்படுத்தும் பொருட்களே ஆகும்.

பீசா சாஸ் செய்யத் தேவையான பொருட்கள்:

பெரிய புளிப்பான தக்காளிகள் – ஆறு.,
ஒரு பெரிய வெங்காயம் – தோல் நீக்கி மூன்றாக கட் செய்யவும்.,
காய்ந்த மிளகாய் – ஆறிலிருந்து எட்டு.,
உப்பு – தேவையான அளவு.,
டொமாட்டோ கெட்சப் அல்லது தக்காளி சாஸ் – இரண்டு மேஜை கரண்டி (இது இல்லை என்றால் வினிகர் ஒரு டீஸ்பூன்).,
சர்க்கரை – இரண்டு டீஸ்பூன். காரமாக இந்திய டேஸ்டில் விரும்பினால் சர்க்கரை தவிர்க்கவும்.,

மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்.,
ஒரேகனோ – அரை டீஸ்பூன்.,
basil – அரை டீஸ்பூன்.,
பூண்டு – பொடியாக நறுக்கியது ஆறு.,

செய்முறை:

தக்காளி, காய்ந்த மிளகாய், மற்றும் வெங்காயம் இவற்றை தண்ணீர் சேர்த்து பதினைந்து நிமிடம் வேக விடவும். தக்காளி தோல் நீக்கி விட்டு நீர் வடித்து ஆறியதும் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

இப்போது ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பூண்டை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் இதில் அரைத்த விழுதை கலந்து மூடி போட்டு சிம்மில் பதினைந்து நிமிடம் வைக்கவும். இதில் இல்ல நீர் வற்றி ஜாம் பதத்திற்கு வர வேண்டும். அதாவது நீங்கள் பீசாவில் தடவும் பொது திக் ஆக இருக்கும் பதம்.

இப்போது இதில் ஒரெகானோ, பேசில், உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து ஐந்து நிமிடம் வைத்து ஆப் செய்யவும். இந்த சாஸ் ப்ரிட்ஜில் வைத்து மூன்று வாரங்களுக்கு உபயோகபடுத்தலாம். இது பீசா, பஸ்தா, பிரட் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

பீசா செய்யத் தேவையான பொருட்கள்: 

மைதா மாவு – நானுறு கிராம்.,
ஈஸ்ட் – ஒரு தேக்கரண்டி.,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்.,
வெதுவெதுப்பான நீர் – நூறு மில்லி.,

டாப்பிங் செய்ய:

நீங்கள் விரும்பிய அனைத்து காய்கறி பழங்கள் சேர்க்கலாம்.,
நீள வாக்கில் வெட்டிய வெங்காயம் – ஒன்று.,
நீள வாக்கில் வெட்டிய – தக்காளி ஒன்று.,
மூன்று வண்ண குடைமிளகாய் – மெலிதாக நீளவாக்கில் வெட்டியது தலா ஒன்று.,
சின்ன துண்டுகளாக வெட்டிய பைன் ஆப்பிள் – ஒரு கைப்பிடி.,
மஷ்ரூம் குறுக்கு வாட்டில் வெட்டியது – தேவையான அளவு.,
மோசறேல்லா சீஸ் – நூறு கிராம்.,
செடார் சீஸ் – நூறு கிராம்.,
பனீர் – ஐம்பது கிராம்.,
கருப்பு மற்றும் பச்சை ஆலிவ் – ஒரு கைப்பிடி.,
இதில் சீஸ் தவிர்த்து மற்ற காய்கள் – உங்கள் அவைலபிளிட்டி பொறுத்து சேர்த்துக் கொள்ளவும்..

உப்பு சிறிதளவு….

செய்முறை:

நூறு மில்லி வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடம் வைக்கவும். இது நன்கு பொங்கி வர பத்து நிமிடம் எடுக்கும். ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி அதில் எண்ணெய் ஒரு கரண்டி சேர்க்கவும். அதில் மாவிற்கு ஏற்ற உப்பு உங்கள் சுவைக்கு தக்க சேர்க்கவும். இதை நன்கு கலந்து விடவும். இப்போது ஈஸ்ட் கலவையை இதில் கலக்கவும். நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

இதை பத்து நிமிடங்கள் நன்கு ரப்பர் போல் இழுத்து பிசைய வேண்டும். பின்னர் இதை ஒரே உருண்டையாக்கி அதன் மேல் சிறிது ஆயில் தடவி அதை ஒரு ஈர துணி கொண்டு மூடவும். இது நன்கு பெரிதாகி வர வேண்டும். அதற்கு இரண்டு மணிநேரம் எடுக்கும்.

இரண்டு மணி நேரம் சென்று பொங்கி வந்த மாவை ஒரு பஞ்ச் செய்து அதை ஒரு பிசா தட்டு அல்லது வேறு ஏதாவது தட்டில் பீசா போல் தட்டவும். இது மிக மெலிதாக அல்லது மிக கனமாக இருக்கக் கூடாது. மீடியம் சைசில் இருக்க வேண்டும். இதை தட்டிய பின் ஒரு போர்க் கொண்டு இதில் எல்லா இடத்திலும் குத்தவும்.

பின்னர் இதன் மேல் முழுவதும் படுமாறு பீசா சாஸ் தடவவும். பின்னர் இதில் மொசெரால்லா, மற்றும செடார் சீஸ் தூவவும். பின்னர் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஷ்ரூம், பைன் ஆப்பிள், ஆலிவ் என்று உங்களுக்கு என்ன டோப்பிங் வேண்டுமோ அதை சேர்க்கவும்.

பின்னர் எக்ஸ்ட்ரா சீஸ் வேண்டும் என்றால் அதில் மற்றும் ஒரு லேயர் சீஸ் ஆட் செய்யவும். இதற்கு மேல் சில்லி flakes, ஒரேகனோ, பார்ஸ்லி,பெப்பர், தைம் சேர்க்கவும். பின்னர் இதை அவனில் நானூறு டிகிரியில் இருபது நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

அவன் இல்லை என்பவர்கள் பிரஷர் குக்கரில் உப்பு சேர்த்து மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் சூடு செய்யவும். பின்னர் இதில் ஒரு ஸ்டீல் ஸ்டான்ட் வைத்து பிசா வைத்த தட்டை அதன் மேல் வைத்து மூடி போட்டு மூடவும். வெயிட் போட கூடாது. இருபாத்து நிமிடம் அதிக வெப்பத்தில் வைத்து எடுத்தல் பீசா தயார்.

குறிப்பு:

ஒரேகனோ, தைம், பார்ஸ்லி இதெல்லாம் விலை அதிகம் என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஒரேகனோ நம்முடைய காய வைத்து பொடித்த கற்பூர வள்ளி. தைம் நம்முடைய காய வைத்து பொடித்த துளசி., பார்ஸ்லி நம்முடைய காய வைத்து பொடித்த கொத்துமல்லி இழை.

இதை நீங்கள் வீட்டிலேயே செய்து விட முடியும். சில்லி flakes காய்ந்த நீட்டு மிளகாயை ஒன்றும் பாதியுமாக பொடித்து எடுக்கவும். இப்போது உங்கள் பீசாவை வீட்டிலேயே செய்து மகிழுங்கள். இதில் சீஸ் மட்டுமே நீங்க அதிக பணம் செலவழிக்க வேண்டும்.

மொசெர்ல்லா சீஸ் நாம் வீட்டிலேயே செய்யலாம். ஆனால் அதை விட சீஸை வாங்கி கொள்வது சுலபம். நான் அசைவ பிரியன் என்று கூறுபவர்கள்., இதில் வேக வைத்த சிக்கன், இறால், மீன் ஆகியவை சேர்க்கலாம்.

எனக்கு பீசா செய்ய பொறுமை இல்லை என்பவர்கள் பிரட் துண்டுகள் மேல் சாஸ் தடவி இந்த டாப்பிங்க்ஸ் போட்டு தோசை தவாவில் போட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து எடுக்கவும்.