அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பிகில். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார் என்று தகவல் வந்தது.
இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 200 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், விஜய் 150 நாட்கள் கலந்து கொண்டுள்ளார்.
விஜய் தற்போது தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு டப்பிங்கையும் முடித்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
ஒரு படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கு முன்பாக, அதன் டீசரை வெளியிடுவது வழக்கம். ஆனால், ‘பிகில்’ படத்தின் டீசரை வெளியிடாமல், நேரடியாக டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனால் டீசருக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அதே சமயம் நேரடியாக வரும் போகும் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.