சுவையான தக்காளி குருமா செய்வது எப்படி.!!

இன்றுள்ள காலத்தில் நமது இல்லத்தில் சுவையான சாப்பாடு என்பது பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. நமது இல்லத்தில் அவசர நேரத்தில் செய்யும் சாப்படையும் சுவையான சாப்பாடாக செய்யலாம். தக்காளி குருமா என்பது மிகவும் சுவையானது. எளிமையாக குறைந்த பொருட்கள் வைத்து செய்யப்படுவது.

தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள்:

வெங்காயம் பெரியது – ஒரு கிலோ
தக்காளி நன்கு பழுத்தது – அரை கிலோ
முழு தேங்காய் – துருவியது
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, ஏலம், சோம்பு

மஞ்சள் தூள் சிறிது
மிளகாய் தூள் – ஒரு குழி கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும்.தேங்காயை நன்கு மசிய அரைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மசாலா வகைகளைப் போட்டு நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி போல் வதக்கவும்.

இதில் தக்காளி சேர்த்து மீதம் உள்ள உப்பையும் சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூடி நன்கு கொதிக்கவிடவும்.

பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இதில் முட்டை உடைத்து ஊற்றி முட்டை குருமாவாக வைத்து சாதத்துடன் சாப்பிடலாம். இல்லை முட்டை வேக வைத்து இதில் போட்டு சாதத்துடன் சாப்பிடலாம்.