வெண்டைக்காய் சாப்பிட்டால் புத்தி கூர்மையாவது எப்படி?

நம்மில் பெரும்பாலானோருக்கும் நினைவாற்றலானது மாறுபட்டு இருக்கும். இதனை சரி செய்வதற்காக வெண்டைக்காய்களை அதிகளவு சாப்பிட சொல்லி மருத்துவர்கள் மற்றும் பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள்.

நியாபக மறதியின் காரணமாக சாவியை தொலைத்தல் அல்லது வைத்த இடத்தை மறந்துவிடுவது., வீட்டினை பூட்ட மறப்பது போன்ற பல காரணங்கள் இருந்து வருகிறது. இதற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

நமது மூளையானது சுறுசுறுப்பாக இயங்குவதற்கு வெண்டைக்காய் அதிகளவில் உதவி புரிகிறது. இதில் உள்ள பாஸ்பிரஸ் சத்துக்களின் மூலமாக நமது மூளையானது சுறுசுறுப்பாக இயங்குகிறது.