அஜித்தின் 60-வது படத்தில் வில்லன் யார்?

அஜித் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை நடிக்கவைக்க படக்குழு முயற்சித்துவருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பின் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்து அஜித்தின் 60-வது படமும் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கப்படுவதாக இருந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அஜித்தின் விருப்பத்திற்குரிய ஸ்போர்ட்ஸ் மற்றும் ரேஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் படம் இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் தெரிவித்தார்.

என்னை அறிந்தால் படத்திற்குப் பின் அஜித் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியது.

ஆனால், அஜித்தின் 60தவது படத்தில் அஜய் தேவ்கன் வெளியான செய்தியை தற்போது படக்குழு மறுத்துள்ளது. போனி கபூர் ஹிந்தியில் மைதான் என்றொரு படத்தை தயாரிக்கிறார் இதில் அஜய் தேவ்கன் தான் ஹீரோவாக நடிக்கிறார். இதை வைத்துதான் தல 60 படத்தில் அஜய் தேவ்கன் வில்லனாக நடிக்கலாம் என்று பரப்பிவருகிறார்கள் போல. அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி யார் நடிக்கிறார்கள் என்பதை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தல 60 படக்குழு தெரிவித்துள்ளது.