இடுப்பின் சுற்றளவு அளவு இந்த அளவுக்கு மேல் இருந்தால் ஆபத்தாம்!

நமது அடிவயிற்றில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பு காரணமாக தொப்பை ஏற்படுகிறது. இதை குறைக்காவிட்டால் நாளடைவில் உயிருக்கே ஆபத்தான பல நோய்களை சந்திக்க நேரிடலாம்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு 40 இன்ச்க்கு அதிகமான இடுப்பளவையும், பெண்கள் 35 இன்ச்க்கு அதிகமான இடுப்பளவையும் கொண்டிருந்தால் அவர்களுக்கு நோய்கள் அதிகமாக தாக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

தொப்பையால் ஏற்படும் நோய்கள்

நீண்ட நாள்பட்ட தொப்பை காரணமாக நுரையீரல் அடைப்பு ஏற்பட்டு சீராக மூச்சு விட முடியாமல், உறக்கமின்மை மற்றும் குறட்டை ஆகிய பிரச்சினை ஏற்படும்.

தொப்பை இருந்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

உயரத்திற்கு ஏற்ற எடை இருந்தாலும் இடுப்பின் அளவு அதிகமாக இருந்தால் பித்த கற்கள் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வயதான காலத்தில் தொப்பையுடன் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கண்புரை நோய் அதிகமாக வர வாய்ப்பு இருக்கிறது.

இடுப்பை சுற்றி தேங்கும் கொழுப்பு கண்கள், பித்தப்பை, மட்டுமலாமல், மூளையையும் பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

வயிற்று கொழுப்புக்கள் அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.