நாங்களும் கிங் தான் என்று கெத்து காட்டிய கோலி..!

ரிவியூ கிங் என்று சொன்னால் அது தோனி தான் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சொல்லுவார்கள். விராட் ரிவியூ எடுப்பதில் அவசரப்படுகிறார் என்றும் அவர் கணிப்பு சரியில்லை என்று விமர்சித்து வந்தார்கள். மேலும் விக்கெட்  கீப்பருக்குத்தான் ரிவியூ எடுக்கலாமா வேண்டாமா என்று தெளிவாக தெரியும் எனவே தோனி எடுத்தால் சரியாக இருக்கும் என்று சொல்லுவார்கள்.

தோனி இல்லாத சமயத்தில் ரிஷப் பாண்ட் விக்கெட் கீப்பராக இருப்பார் இருப்பினும் அவர் எடுக்கும் ரிவியூ பலமுறை சரியாக இருந்ததில்லை. தோனி எடுக்கும் முடிவானது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும். எனவே அனைவரும் தோனியின் முடிவையே ஏற்பார்கள். விராட் எடுக்கும் முடிவானது சரியாக இருக்காது என்று விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி சற்றும் யோசிக்காமல் சரியாக கணித்து ஒரு ரிவியூவை எடுத்தார். அந்த ரிவியூவால் தான் பும்ராவின் ஹாட்ரிக் விக்கெட் உறுதியானது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் அடிக்க, இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

இந்த 7 விக்கெட்டுகளில் 6 விக்கெட் பும்ரா விக்கெட். அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரை வீசிய பும்ரா, டேரன் பிராவோ, ப்ரூக்ஸ், சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இவரக்ளில் சேஸுக்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அம்பயர் அவுட் கொடுக்காததை கண்ட கேப்டன் கோலி, சற்றும் யோசிக்காமல் ரிவியூ எடுத்துவிட்டார்.

பும்ராவின் கருத்தையோ விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கருத்தையோ கேட்கவே இல்லை. அவருக்கு அது அவுட் என்பது உறுதியாக தெரிந்தது. எனவே அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்றதும், ரிவியூ எடுப்பதற்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆவதற்கு முன்னதாகவே எடுத்துவிட்டார். அவ்வளவு உறுதியாக அது அவுட் என நம்பினார் கோலி. அந்த பந்து லெக் ஸ்டம்பை அடித்தது. எனவே ரிவியூவில் இந்தியாவிற்கு சாதகமாக முடிவு வந்தது. சேஸ் நடையை கட்டினார்.

இந்த ரிவியூ மூலம் கோலியை விமர்சனம் செய்தவர்களை எல்லாம் வாயடைக்க செய்துவிட்டார் கிங் கோலி. இதன் மூலம் மறுபடியும் அவரை கிங் தான் என்று நிரூபித்துள்ளார்.