இந்திய பெண் அமெரிக்கா நீதிபதியா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பெண் வக்கீல் ஷெரீன் மேத்யூசை தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதி பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பெண் வக்கீல் ஷெரீன் மேத்யூஸ். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இந்த நிலையில், இவரை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதி பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்சபை இதற்கு ஒப்புதல் வழங்கினால் ஷெரீன் மேத்யூஸ், கலிபோர்னியா தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பு ஏற்பார்.

இது சாத்தியமானால் தெற்கு மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய பசிபிக் அமெரிக்க பெண் என்ற பெருமையை ஷெரீன் மேத்யூஸ் அடைவார்.

ஷெரீன் மேத்யூஸ் தற்போது, சாண்டியாகோவில் உள்ள அமெரிக்காவின் 5-வது மிகப்பெரிய சட்ட நிறுவனத்தில் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறார்.

முன்னதாக, கலிபோர்னியாவின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வக்கீல் அலுவலகத்தின் குற்றவியல் பிரிவில் உதவி வக்கீலாக மேத்யூஸ் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.