மீண்டும் நடிக்க வரும் 90s நடிகை..

90 களில் முக்கிய நடிகர்களின் படத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக வலம்வந்தவர் நடிகை விசித்ரா. முத்து, வீரா, போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

பின் கவர்ச்சி நடிகையாக மாறி சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். இரவு படங்கள் என்ற படத்திற்கு பிறகு திருமணமாகி மூன்று மகன்களுக்கு தாயானார். அதன்பின் கணவருடன் சேர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தை கவனித்து கொண்டார்.

கடந்த 18 ஆண்டுகளாக படத்தில் நடிக்காமல் இருந்த விசித்ரா தற்போது படங்களில் நடிக்க போட்டோஹூட் நடத்தியுள்ளார். தற்போதைய படங்களின் கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.