மல்லிகை பூ. இந்த பூவை நமது தமிழ் பெண்கள் தலையில் வைத்து., அலங்காரமாக ஜோடித்து நடந்து வரும் போது பெண் தெய்வங்களே வந்தார் போல இருக்கும். கூந்தல் முழுவதும் மல்லிகை பூவை சூடி., நெற்றியில் திலகம் இட்டு., பாரம்பரிய ஆடையை அணிந்து வரும் தமிழச்சியின் அழகை காண ஆயிரம் கண்கள் போதாது என்று தான் கூற வேண்டும். அதனாலேயே பெண்களை தெய்வத்திற்கு ஈடாகவும் ., தெய்வத்தின் மறு உருவமாகவும் தமிழன் வணங்கி வருகிறான்.
இந்த மல்லிகை பூவானது நல்ல நறுமணத்தையும்., மருத்துவத்திற்கும் அதிகளவில் பயன்படுகிறது. இந்த மல்லிகையானது இந்தியா., இலங்கை., தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் அதிகளவு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இந்த செய்திக்கான முழு வீடியோ பதிவு:
இந்த மல்லிகையானது மதுரையில் இருந்து அதிகளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகளவில் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகையின் விளைச்சல் அதிகளவில் உள்ளதால்., மதுரையை மல்லி நகரம் என்று அழைப்பார்கள். இந்த மல்லிகை பூவானது பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய மலராகவும்., சிரிய நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரில் அந்நகரின் குறியீடாகவும் உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை பகுதிகளில் பயிரிடப்படும் மல்லிகை பூவானது., கர்நாடக மாநிலத்தில் உள்ள பங்களா என்னும் பகுதியில் இருந்து அதிகளவில் மதுரையை போன்றே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மல்லிகை பூவினை போன்றே மல்லிகை செடியின் வேரும் மருத்துவ குணத்தை தன்னுள் கொண்டுள்ளது. மல்லிகை பூவினை நிழல் உள்ள பகுதியில் உலரவிட்டு பொடியாக அரைத்து தேநீர் போன்று காய்ச்சி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனை சரியாகும்.