ஆசையாக பேசி அழைத்த பெண்கள்.. நம்பி சென்ற ஆணுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி

டெல்லியில் ஒரு ஆணிடம் ஆசையாக பேசி 6 பெண்கள் பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 3 மாதங்களாக ஒரு பெண்ணிடம் பழக்கத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் அந்த நபரை தணியாக சந்திக்க வேண்டும், என்று ஆசையாக பேசியுள்ளார்.

அந்த நபரும், குறித்த பெண்ணின் ஆசைவார்த்தைகளை நம்பி பெண்ணை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது ஒரு தனி இடத்திற்கு வந்த அந்த நபரை, ஒரு வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சில ஆண்களும், சில பெண்களும் இருந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள், அந்த நபரை மிரட்டி நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும், 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ்வாறு பணம் கொடுக்கவில்லையென்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக கூறியுள்ளனர்.

பின்பு பதற்றமடைந்த அந்த நபர் 10இலட்சம் தான் என்னால் தர முடியும் என்று கூறியுள்ளார்.

அதன் பின்பு பணத்தை வீட்டிலிருந்து எடுத்து வருவதாக கூறி அங்க இருந்து தப்பித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி ரோகிணி செக்டார் பகுதி போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிந்த போலீசார், இதுதொடர்பாக 6 பெண்களை கைது செய்துள்ளனர்.